சென்னை: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் தங்கி இருக்கும் பலர் குடும்பத்துடன் தங்களது சொந்தஊர்களுக்கு புறப்பட்டுச் செல்ல தொடங்கியுள்ளனர்.
அதேநேரம், வார விடுமுறை மற்றும் இன்று மே தின விடுமுறைஎன்பதால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து பயணிகளின்வசதிக்கேற்ப கூடுதலாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.
இதேபோல் நேற்று முன்தினம் இரவும் சொந்த ஊர்களுக்கு செல்ல வழக்கத்தைவிட அதிக அளவிளான பயணிகள் குடும்பத்துடன்குவிந்தனர். திருச்சி, மதுரை, கோவை, தூத்துக்குடி, நெல்லைஉள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும்பேருந்துகளில் ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகளின்கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு இல்லாமல் வந்த பயணிகள் கிடைக்கும் பேருந்துகளில் ஏறிச் சென்றனர்.
கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், பெரம்பலூர், கடலூர், பண்ருட்டி, பெரம்பலூர் உள்ளிட்ட ஊர்களுக்கு குறைந்த அளவிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டதாகவும், இரவு 10.30 மணிக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும்பயணிகள் தெரிவித்தனர்.
» தமிழக நிதியமைச்சரின் ஆடியோ; திமுகவின் சொத்து பட்டியலுக்கு ஒப்புதல் வாக்குமூலம்: அண்ணாமலை கருத்து
» வழக்குகளை துப்பு துலக்குவதில் சுணக்கம் - திறமையான விசாரணை அதிகாரிகள் குறைவாக இருப்பது காரணமா?
இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் போக்குவரத்து அதிகாரிகளிடம் சென்று வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பேருந்து நிலைய வளாகத்தில் அளவுக்கு அதிகமாக கூட்டம் நிரம்பி வழிந்ததால் வயதானவர்கள், குழந்தைகளுடன் வந்த குடும்பத்தினர் பலர் தங்களது உடைமைகளுடன் செய்வது அறியாமல் நின்றனர். இதனால் இரவு முழுவதும் பயணிகள் குடும்பத்துடன் தவிக்கும் நிலை ஏற்பட்டது.
பின்னர் போக்குவரத்து அதிகாரிகள் மாற்று பேருந்துகளை ஏற்பாடு செய்தனர். நள்ளிரவுக்கு மேல் இயக்கப்பட்ட கூடுதல் பேருந்துகள்மூலம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர்.
இது ஒருபுறமிருக்க ஆம்னி பேருந்து நிலையத்திலும் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதைப் பயன்படுத்தி அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் தெரிவித்தனர். குறிப்பாக சென்னையில் இருந்து நெல்லை செல்ல ரூ.3 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், ``விரைவுபேருந்துகளுடன் பிற போக்குவரத்துக் கழக பேருந்துகளையும் சேர்த்து போதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு உடனுக்குடன் கூடுதல் பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம். ஆம்னிபேருந்து கட்டணத்தை பொருத்தவரை தொடர் சோதனை நடத்தப்படுகிறது. விரைவில் அமைச்சர்தலைமையில் உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்த உள்ளோம்'' என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago