நிதி அமைச்சர் ஆடியோ குறித்து முதல்வர் இதுவரை மறுப்புத் தெரிவிக்கவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சேலம்: "ஆடியோவில் பேசிய நிதி அமைச்சர், அந்த ஆடியோவில் தான் பேசியதுபோல வெட்டி ஒட்டி வெளியிடப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். அப்படியென்றால், அவர் பேசியது உண்மை என்றாகிவிட்டது" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சேலத்தில் அதிமுக சார்பில் நடந்த நிகழ்வில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர், "உதயநிதி ஸ்டாலின், சபரீசன் இரண்டு பேரும் 30 ஆயிரம் கோடியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல், விழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு செய்தியை சொல்கிறார். இதை சாதாரண நபர் சொல்லவில்லை, நிதி அமைச்சரே சொல்கிறார்.

நானும் அறிக்கை வெளியிட்டேன். பேட்டியும் கொடுத்துவிட்டேன். எது எதற்கோ முதல்வர் பேட்டி கொடுக்கிறார். அறிக்கை வெளியிடுகிறார். ஆனால் இந்த விசயத்திற்கு இதுவரை மறுப்பே தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த ஆடியோவில் பேசிய நிதி அமைச்சர், பத்திரிகைகளின் வாயிலாக சில தகவல்களைச் சொல்லியிருக்கிறார். அந்த ஆடியோவில் தான் பேசியதுபோல வெட்டி ஒட்டி வெளியிடப்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளார். அப்படியென்றால், அவர் பேசியது உண்மை என்றாகிவிட்டது" என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்