உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மே 31 வரை கோடை விடுமுறை

By செய்திப்பிரிவு

மதுரை: உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மே 31 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 8 நாட்கள் விடுமுறை கால நீதிமன்றம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மே 31 வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் வாரம் 2 நாள் வீதம் 8 நாட்கள் விடுமுறை கால நீதிமன்றம் நடைபெறுகிறது. இந்த நாட்களில் அவசர வழக்குகள் விசாரிக்கப்படும். மே 4, 5-ல் நீதிபதிகள் எம்.தண்டபாணி, ஆர்.விஜயகுமார் ஆகி யோர் முதலில் அமர்விலும், பின்னர் தனி விசாரணையில் ரிட் மனுக்களையும் விசாரிக்கின்றனர்.

நீதிபதி ஆர்.தாரணி அனைத்து குற்றவியல் மனுக்களையும் விசாரிக்கிறார். மே 10, 11-ல் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி முதலில் அமர்விலும், பின்னர் தனியாக ரிட் மனுக்களையும், நீதிபதி ஆர்.கலைமதி குற்றவியல் மனுக்களையும் விசாரிக்கின்றனர். மே 17, 18-ல் பொறுப்பு தலைமைநீதிபதி டி.ராஜா, நீதிபதி என்.மாலா ஆகியோர் அமர்வு வழக்கு களையும்,

பின்னர் நீதிபதி என்.மாலா ரிட் மனுக்களையும், நீதிபதி டி.வி.தமிழ் செல்வி குற்றவியல் மனுக்களையும் விசாரிக்கின்றனர். மே 24, 25-ல் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா முதலில் அமர்வாகவும், பின்னர் தனியாக ரிட் மனுக்களையும், நீதிபதி பி.வடமலை குற்றவியல் மனுக்களையும் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

46 secs ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்