எளிய மொழியில் திருக்குறள் சொற்பொழிவு: கோவையில் நடிகர் சிவகுமார் அறிவிப்பு

By கா.சு.வேலாயுதன்

மகாபாரதச் சொற்பொழிவு போலவே, உலகப் பொதுமறையான திருக்குறளையும் அனுபவக் கதைகள் மூலம் எளிய மொழியில் சொல்லி உங்களுக்கு சேர்க்கப் போகிறேன் என கோவையில் நடந்த நிகழ்வில் தெரிவித்துள்ளார் திரைப்பட நடிகர் சிவகுமார்.

நடிகர் சிவகுமார் இரண்டாண்டுகளுக்கு முன்பு நீண்டதொரு மகாபாரதச் சொற்பொழிவை கோவை மண்மொழியில் மிக எளிமையாகச் சொல்லி பரவலான பாராட்டை பெற்றுள்ளார் இந்த சொற்பொழிவு குறுந்தட்டுகளாக வெளியிடப்பட்டு லட்சக்கணக்கில் மக்களை சென்று சேர்ந்துள்ளன. அதை முன்வைத்து அவரின் அபிமானிகள் இம்மகாபாரதச் சொற்பொழிவு குறுந்தகடு திரையிடலை பல்வேறு இடங்களிலும் நிகழ்த்தி வருகின்றனர். அதில் சிவகுமாரும் பங்கேற்றுப் பேசி வருகிறார்.

அந்த வகையில் கோவை புதூரில் உள்ள சாய் மகாலில் ஞாயிறன்று இரவு சிவகுமாரின் மகாபாரத குறுந்தட்டு திரையிடல் நிகழ்வை கோவை விஜயா பதிப்பகமும், கோவைபுதூர் நூலக மன்றமும் இணைந்து நடத்தியது. அதில் சிவகுமாரும் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை மு.வேலாயுதம் வரவேற்று பேச, தமிழ்க்கல்லூரி முன்னாள் முதல்வர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். 2 மணி நேர மகாபாரத குறுந்தட்டு திரையிடலுக்குப் பிறகு அரங்கிலிருந்து பார்வையாளர்கள் பலரும் சொற்பொழிவை சிலாகித்துப் பேசினர். மகாபாரதத்தை எளிய மொழியில் - அதிலும் தித்திக்கும் கொங்கு மொழியில், மிகச் சுருக்கமாக, அத்தனை பாத்திரங்களின் உணர்ச்சிகளையும் கொட்டி, இயல்பாக கொடுத்திருப்பதன் மூலம் கடைகோடி பாமர மக்களுக்கும் இது போய்ச் சேரும். இதை சாதித்ததன் மூலம் கொங்கு மொழித்திலகம், கொங்கு பாரத வியாசர் என்று கூட சிவகுமாருக்கு பட்டம் தரலாம் என்றும் பாராட்டுகள் அதில் நிறைந்தன.

இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய சிவகுமார் 'வியாசர் தந்த பாரதம்', பாரதியின் 'பாஞ்சாலி சபதம்' போன்றவற்றை மட்டுமல்லாது, சில ஆண்டுகளுக்கு முன் திரையில் ஜொலித்த மகாபாரதத் தொடரை பார்த்துக் கேட்டு, அதை தன் கைகளாலேயே ஒவ்வொரு வரிகளையும் எழுதி, எல்லாவற்றையும் ஒப்பிட்டுப் பார்த்து, தனக்குள் அத்தனை கதாபாத்திரங்களும் பலவேறு கோணங்களில் உருவேறி, அதுவே தானுமாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதற்குள்ளேயே உருவேற்றி நகர்ந்த பாங்கை உணர்வு பொங்க குறிப்பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது.

''வியாசர் தொடங்கி ராஜாஜி வரை பாரதத்தில் எத்தனை எழுத்து வடிவங்கள் உண்டோ அதையெல்லாம் படித்துப் படித்து நிறைய குறிப்புகளை வைத்துக் கொண்டேன். வியாசரைப் போலவே நம் மக்களுக்கு புரியும்படி கதை சொல்லுவது எப்படி என்பதை என் மொழியிலேயே வகுத்தும் கொண்டேன். அப்படித்தான் என்னால் வரையப்பட்ட 1500 பக்கங்கள் கொண்ட ஸ்கிரிப்ட் பிறகு 1200 ஆகி, அதன் பிறகு 1000 ஆக, 750 ஆக, இறுதியில் 300 பக்கங்களாக வடிவம் கொண்டது. அதை எப்படி கதை சொல்வது. மேதமைத் தனம் கூடாது. அந்தப் பாவத்தை நாம் செய்யக் கூடாது; அந்தந்த பாத்திரங்கள் அப்படியே நிற்க வேண்டும்; அது நம் மொழியில் புரியும்படி எடுத்தாள வேண்டும் என்றெல்லாம் அதை இறுக்கியபொழுது எனக்குள்ளேயே ஒரு மகாபாரதம் உருவானது. அதுதான் உங்கள் முன்னால் இப்போது உள்ளது.

மதம் கடந்து, சாதி, இனம், கடவுள் கடந்து நிற்கும் தமிழில் நிற்கும் ஒரே நூல் உலகப்பொதுமறை திருக்குறள். அது இன்னமும் நாம் நினைத்தபடி நம் மக்களிடமே சென்று சேரவில்லை என்று நிலை இப்போதும் உள்ளது. அதை நம் மொழியில் சின்னஞ்சிறு அனுபவக் கதைகள் மூலம் எளிய முறையில் தர முயற்சிகளில், அந்த தேடலில் இறங்கியுள்ளேன். அதன் பணிகள் முடிவடைய எப்படியும் 2 முதல் 3 ஆண்டுகள் கூட ஆகலாம்!'' இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்