குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு

By செய்திப்பிரிவு

சென்னை: துணை ஆட்சியர், கூட்டுறவுச் சங்க துணைப் பதிவாளர் உட்பட குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு, மாநிலம் முழுவதும் கடந்த நவம்பர் 19-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1.90 லட்சம் பட்டதாரிகள் எழுதினர்.

அவர்களுக்கான தேர்வு முடிவுகளை நீண்ட தாமதத்துக்கு பின்னர் டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்டது. அதை www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் சென்று தேர்வர்கள் அறிந்துகொள்ளலாம். ஒரு பணியிடத்துக்கு 20 பேர் வீதம் 2,162 பட்டதாரிகள் தேர்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் அடுத்த கட்டமாக முதன்மைத் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். குரூப் 1 முதன்மைத் தேர்வு ஆகஸ்ட் 10 முதல் 13-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.

இதையடுத்து முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இ-சேவை மையங்கள் வாயிலாக மே 8 முதல் 16-ம் தேதிவரை விண்ணப்பிக்க வேண்டும். இதில் தேர்ச்சி அடைபவர்களுக்கு நேர்முகத் தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும். அதிலும் வெற்றி பெறும் தேர்வர்களுக்கு உரிய பணியிடங்கள் ஒதுக்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்