நிலம் கையகப்படுத்தியதில் மோசடி: 5 அரசு அலுவலர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் அருகே தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு தேர்வான இடத்தை வகை மாற்றம் செய்து, தனி நபர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கி, மீண்டும் அவற்றை அரசிடமே விற்று மோசடி செய்தது தொடர்பாக 5 அரசு அலுவலர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நேற்று நடந்தது.

விழுப்புரம் சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வருபவர் முத்து மீனாட்சி (47). இவர், 2014–18-ல் திருவாரூர் கோட்டாட்சியராக பணிபுரிந்தார்.

அப்போது, திருவாரூர்- நாகை இடையே தேசிய நெடுஞ்சாலையை இருவழிப்பாதையாக விரிவாக்கம் செய்யும் பணிக்கு கையகப்படுத்தப்படும் நிலங்கள் குறித்த பட்டியலை 2015-ல் தேசிய நெடுஞ்சாலை துறை வெளியிட்டது. இதில், அடியக்கமங்கலம் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலமும் அடங்கும். அதன்பின், இந்த நிலத்தில் 31,808 சதுர அடி நிலத்தை வகை மாற்றம் செய்து, அதே ஊரைசேர்ந்த ஞானசேகரன் மகன்கள் குமார், சுகுமார், சிவக்குமார், சதீஷ்குமார், வினோத், ஞானசேகரனின் மனைவி முல்லையம்மாள், மகள் சுகுமாரி, உறவினர் ஆண்டிபாளையம் விஜயலட்சுமி ஆகியோருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டன.

அதன்பின், நெடுஞ்சாலை துறையினர் விரிவாக்கம் செய்யும்போது, இந்த இடத்தை ஞானசேகரன் குடும்பத்தினர் அரசிடமே ரூ.1.83 கோடிக்கு விற்பனை செய்துள்ளனர். இதற்கு அப்போது திருவாரூரில் கோட்டாட்சியராக பணியாற்றிய முத்து மீனாட்சி, தேசிய நெடுஞ்சாலைக்கான நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை (58), அடியக்கமங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றிய துர்கா ராணி (36), கிராம உதவியாளர் கார்த்திக் (45) ஆகியோர் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். இதுகுறித்து திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். அதன்பின், இதுதொடர்பாக முத்து மீனாட்சி உட்பட 12 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இந்நிலையில், திருவாரூர் ஜிஆர்டி கார்டன், விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலையில் உள்ள முத்து மீனாட்சியின் வீடுகள், விளமல் சிவன் நகரில் உள்ள விஏஓ துர்கா ராணி வீடு, அடியக்கமங்கலத்தில் கிராம உதவியாளர் கார்த்திக் வீடு, தஞ்சாவூர் பாரதி நகரில் உள்ள நெடுஞ்சாலைத் துறை நில எடுப்பு பிரிவு மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலைவீடு, திருநாகேஸ்வரத்தில் உள்ள முன்னாள் திருவாரூர் வட்டாட்சியரும், ஆதி திராவிடர் நல அலுவலருமான ராஜன்பாபுவின் வீடு ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்