கோவை விளாங்குறிச்சியில் ரூ.10 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

By செய்திப்பிரிவு

கோவை: கோவை விளாங்குறிச்சியில், மனைப்பிரிவில் ஆக்கிரமிப்பில் இருந்த 36 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டனர்.

கோவை 22-வது வார்டு விளாங்குறிச்சி ராமகிருஷ்ணா நகரில் நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான 3.50 ஏக்கர் மனைப் பிரிவு உள்ளது. இதில் 36 சென்ட் இடம், பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டது. கடந்த 1990-ம் ஆண்டு இந்த மனை அமைக்கப்பட்ட சமயத்தில், பொது ஒதுக்கீட்டு இடத்துக்கான ஆவணங்களை அப்போதைய உள்ளாட்சி அமைப்பிடம் மனையின் உரிமையாளர் நாராயணசாமி ஒப்படைக்கவில்லை.

அந்த இடத்தில் 1,200 சதுரடி பரப்பளவில் வீடு கட்டி, பல ஆண்டுகளாக அவர் வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதை எதிர்த்து, நாராயணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில், உதவி ஆணையர் முத்துராமலிங்கம், உதவி நகரமைப்பு அலுவலர் குமார் ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை நேற்று மேற்கொண்டனர். இதையறிந்த அந்த வீட்டில் வாடகைக்கு வசிப்பவர், வீட்டில் உள்ள பொருட்களை காலி செய்யாமல் வீட்டை பூட்டிவிட்டுச் சென்றார்.

வேறு வழியின்றி வீட்டில் இருந்த பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர், வாடகைக்கு வசித்தவர் வந்தவுடன் அவரிடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த வீடு உள்ளிட்ட கட்டிடங்களை இடித்து அகற்றினர்.

தொடர்ந்து, 36 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தையும் கைப்பற்றிய அதிகாரிகள், இந்த இடம் மாநகராட்சி நிர்வாகத்துக்கு சொந்தமானது என்ற அறிவிப்பு பலகையை வைத்தனர். மீட்கப்பட்ட இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.10 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்