கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு டன் கணக்கில் தென்னை துடைப்பங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மா, மலர்கள் உற்பத்திக்கு அடுத்து தென்னை விவசாயத்தில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி, ஆலப்பட்டி, கங்கலேரி, காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், மருதேரி, பாரூர், செல்லம்பட்டி, அரசம்பட்டி, புலியூர், தாதம்பட்டி பகுதிகளில் 5 லட்சத்திற்கும் மேல் தென்னை மரங்கள் உள்ளன. தென்னை மரங்களில் இருந்து மட்டைகள் காய்ந்து விழும்போது, அவற்றில் உள்ள ஓலைக்குச்சிகளை தனியே பிரித்து எடுத்து கட்டும் வேலைகளில் கிராமத்து பெண்கள், முதியவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு சேகரிக்கப்படும் குச்சிகளை துடைப்பமாக கட்டி முன்பு வாரச்சந்தைகளில் விற்பனை செய்து வந்தனர். தற்போது, காவேரிப்பட்டணம், சந்தூர், வேலம்பட்டி, நாகரசம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கிராமப்புறங்களில் சேகரிக்கப்படும் துடைப்பங்களை வாங்கி வந்து, அதனை சீர்படுத்தி வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பும் குடிசை தொழிலில் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது.
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக உள்ள துடைப்பம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறும் போது, ‘‘கிராமங்களில் இருந்து இருசக்கர வாகனங்கள் மூலம் அல்லது மினிவேன் மூலம் தென்னை குச்சிகளைச் சேகரித்து கட்டி வைத்துள்ளவர்களிடமிருந்து நேரடியாக ஒரு கட்டு ரூ.4 முதல் ரூ.6 வரை கொள்முதல் செய்கிறோம். பின்னர் அவற்றை தரம் பிரித்து துடைப்பம் தயார் செய்கிறோம். டெல்லி, குஜராத், பிஹார், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு லாரிகள் மூலம் துடைப்பங்களை அனுப்பி வைக்கிறோம்.
தென்னை துடைப்பம் தரத்தை பொறுத்து ரூ.18 முதல் 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. வியாபாரிகள் சிலர் ஆன்லைனில் துடைப்பம் தொடர்பான விளம்பரங்களை அளித்து ஆர்டர்கள் பெற்று வியாபாரத்தை விரிவாக்கம் செய்து வருகின்றனர். வறட்சி, ஈரியோபைட் தாக்குதல் காரணமாக தென்னையில் ஓலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குச்சிகள் வலுவின்றி உள்ளதால் துடைப்பம் செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது. பற்றாக்குறையின் காரணமாக தென்னை குச்சியின் விலையும் உயர்ந்துள்ளது.
கிராமங்களில் ஓய்வில் இருக்கும் முதியவர்கள், பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் தினசரி வருமானத்திற்கு துடைப்பம் உற்பத்தி உதவியாக இருக்கிறது,’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago