கமல் செல்லும் திசை எதுவென்று தெரியவில்லை: தம்பிதுரை

By எஸ்.கே.ரமேஷ்

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் நடிகர் கமல்ஹாசன் செல்லும் திசை எதுவென்று தெரியவில்லை என நாடாளுமன்ற துணை சபாநாயகரும் அதிமுக எம்.பி.யுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரியில் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஆட்சியை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால், தொடர்ந்து தமிழக அரசை விமர்சித்துவரும் கமல்ஹாசன் எந்த திசையில் செல்கிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை.

திமுக விழாவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவது அக்கட்சியின் விவகாரம். அதில் நான் கருத்து சொல்ல ஒன்றுமில்லை.

தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் டெங்கு காய்ச்சல் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்ததாக மழைக்காலம் வரும் என்பதால், டெங்கு போன்ற தொற்றுநோய்கள் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

அதிமுகவில் அணிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை. எம்.எல்.ஏ.க்களிடம் கருத்துவேறுபாடு மட்டுமே நிலவுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் சில எம்.பி.க்கள் செல்லாத வாக்கு பதிவு செய்தது குறித்து எனக்கு கருத்தில்லை. என்னுடடைய வாக்கு செல்லுபடியாகிவிட்டது என்று மட்டுமே கூறமுடியும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்