பேரூராட்சி பகுதிகளுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: பேரூராட்சி பகுதிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், "கள ஆய்வில் முதலமைச்சர்" திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, அப்பள்ளியில் செயல்பட்டு வரும், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் தேவையை கண்டறிந்து, அவர்களின் கற்றலை எளிமையாக்க செயல்பட்டு வரும் மையத்தை (Model Resource Room - Early Intervention Centre) ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் இந்த ஆண்டு பேரூராட்சி பகுதிகளிலும் விரிவுப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE