கோவை: அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா தொண்டாமுத்தூரில் நடந்தது. அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பழங்கள், நீர் மோர் வழங்கினார்.
பின்னர் அவர் பேசும்போது, “சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது. திமுக ஆட்சியை அக்கட்சியினரே விரும்பவில்லை. கோவையில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. 48 வழக்குகள் பதிவு செய்து, 1,250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். தொண்டாமுத்தூரில் பேருந்து முனையம் அமைக்க அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கினோம்.
திமுக அரசு அதை வீணாக்கி வருகிறது. முறையாக பணிகள் நடக்காவிட்டால், தொண்டாமுத்தூரில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்” என்றார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட இணைச்செயலர் செல்வதுரை, பொருளாளர் கருப்புசாமி, ஜெயலலிதா பேரவை இணைச்செயலர் விஜயகுமார், தொண்டாமுத்தூர் ஒன்றிய தலைவர் மதுமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago