தமிழக வனத்துறையில் பணியாற்றி, பணியின்போதே இறந்து போன வனத்துறை அலுவலர்கள், ஊழியர்கள் நினைவாக கோவையில் நினைவுத்தூண் அமைக்கப்படுகிறது. இது வனத்துறை தியாகிகள் தினமான செப்டம்பர் 11 அன்று திறக்கப்பட பணிகள் நடைபெற்று வருகிறது.
1730 ஆம் ஆண்டில் ஜோத்பூர் மன்னர் கெஜ்ரி மரங்களை வெட்டுவதற்கு அங்குள்ள பிஷ்னோய் இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது 360க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அதற்காக செப்டம்பர் 11 ஆம் நாளை இந்தியாவின் சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வனத்துறை தியாகிகள் தினமாக (forest martyrs day) சமீபகாலமாக அனுஷ்டித்து வருகிறது.
அந்த நாளில் வனத்துறையில் பணியாற்றி, வனங்களை, வன உயிரினங்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்ட போது இறந்த வனத்துறையினரின் நினைவாக அஞ்சலியும் செலுத்தப்படுகிறது. இந்த நாளை தமிழக வனத்துறையும் அனுஷ்டிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் அரசுக்கு வனத்துறை ஊழியர்கள் சார்பாக வைக்கப்பட்டு வந்தது. அதன்படி இந்த ஆண்டு முதல் தமிழகத்திலும் இந்த நாளை வனத்துறையினர் தியாகிகள் தினமாக அனுஷ்டிக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த நாளை அனுஷ்டிக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தமிழக அரசு வன உயர் பயிற்சியக வளாகத்தில் சலவைக்கல்லால் ஆன நினைவுத்தூண் கட்டப்பட்டு வருகிறது. இதில் இதுவரை தமிழக வனத்துறையில் பணியாற்றி யானைகளால் தாக்கி இறந்த, காட்டுத்தீ அணைக்கப்போய் அகப்பட்டு உயிர் நீத்த, வீரப்பன் தேடுதல் வேட்டையில் மரணத்தைத் தழுவிய வனத்துறையினரைப் பட்டியலிட்டு கல்வெட்டு பொறிக்கப்பட்டு வனத்துறை உயர் அதிகாரிகள் தலைமையில் அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ரூ. 2 லட்சத்தில் இந்த நினைவுத்தூண் முழுமையாக முடிக்கப்பட்டு, தற்போது அதற்கு சுற்றுச்சுவர் தூண்களும், பாதுகாப்பு வேலியும், பூங்காவும் ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. இம்மேடையின் கீழே, 'வன தியாகிகள் நினைவுச்சின்னம்' என்றும், 'வனத்துறையில் பணியாற்றி வனப்பாதுகாப்பிற்காக தம் இன்னுயிர் நீத்து இறவாப்புகழுடன் திகழும் பெருமக்களின் நினைவாக!' எனவும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தி இந்துவிடம் பேசிய வனத்துறை அலுவலர் ஒருவர், ''வனத்துறை தியாகிகள் தினம் செப்டம்பர் 11-ம் தேதி அனுஷ்டிக்கலாம் என்று போன வருஷம் அரசு உத்தரவு வந்தவுடன் இப்படியொரு நினைவு மேடை அமைக்க மேலிடத்தில் திட்டமிட்டனர். இப்படியொரு மேடை அமைத்து பராமரிக்கும் அளவுக்கு, வசதியுடன் வனத்துறைக்கான வேறு இடம் கிடைக்கவில்லை. அதற்கு பொருத்தமான இடம் இதுவே என்று முடிவு செய்து இங்கே அமைக்க வழிகாட்டினர்.
அதன்படியே ரூ. 2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ஒரு மாதம் முன்பு இப்பணிகள் தொடங்கப்பட்டது. மேடைப் பணிகள் முடிந்து தற்போது சுற்றுச்சுவர் தூண் பணிகள் நடந்து வருகிறது. அதே சமயம் தமிழ்நாடு வனத்துறையில் டிவிஷன் வாரியாக வனத்துறையில் பணியின் போது தியாக மரணம் அடைந்த ஊழியர்கள், அலுவலர்கள் பற்றி தகவல்கள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 25 பேர் பட்டியலில் வந்துள்ளனர். இன்னமும் பல டிவிஷன்களில் பட்டியல் வரவேண்டியுள்ளது!'' என அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago