கோயில் நிலங்களை அளந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜெகந்நாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.

கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றை அளந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். மோசடியாக பதியப்பட்ட பத்திரங்களை ரத்து செய்ய தமிழக அரசை அறிவுறுத்த வேண்டும்’’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், ஆர். கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் குறிப்பி்ட்டுள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, நிலங்களை அளந்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கு விசாரணையை கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு அமர்வுக்கு மாற்றி, விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்