மதுரை: தமிழக நிதி அமைச்சர் பேசியதாக கூறப்படும் ஆடியோ குறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், அரசியல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் திமுகவையும், அதன் தலைவரையும் பற்றி பேசியதாக வெளியான ஆடியோ விவாதப் பொருளாகியுள்ளது. அப்படி தான் பேசவில்லை என்று நிதி அமைச்சர் மறுக்கிறார்.
இந்த ஆடியோவின் உண்மைத் தன்மையை உலகத்துக்குச் சொல்ல வேண்டிய தார்மிக பொறுப்பு முதல்வர் ஸ்டாலினுக்கு உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்ய வேண்டும்.
அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது. ஆனால் தற்போது திமுகவின் ஆட்சி காலத்தில் பெண் காவலருக்குக்கூட பாதுகாப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
» மே.வங்க பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபரால் பரபரப்பு
» ராணுவத்துக்கு அதிகம் செலவிடும் நாடுகளின் பட்டியல்: 4-வது இடத்தில் இந்தியா!
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
14 hours ago