சென்னை: கோடை காலத்தில் கறுப்பு கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்களித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் அனைவரும் கறுப்பு - வெள்ளை உடைக்கு மேல், கறுப்பு கோட், கழுத்தில் வெள்ளை பட்டை, கறுப்பு கவுன் ஆகியவற்றை அணிந்து ஆஜராக வேண்டும்.
கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில்கொண்டு ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை வரை கறுப்பு கவுன் அணிவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென மெட்ராஸ் பார் அசோசியேசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்திடம் இந்த ஆண்டு தொடக்கத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்தக் கோரிக்கை அனைத்து நீதிபதிகள் அடங்கிய கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
» பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு பிரதமர் மோடி அஞ்சலி
» பாஜக எம்எல்ஏ வீட்டின் முன்பு முதல் மனைவி போராட்டம் - புதுச்சேரியில் பரபரப்பு
அதன்படி, ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை கறுப்பு கவுன் அணிவதில் இருந்து வழக்கறிஞர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கறுப்பு கோட் மற்றும் கழுத்தில் வெள்ளை பட்டை அணிவது கட்டாயம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago