‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’-வின் சுகாதார விழிப்புணர்வு பாடல்கள் வெளியீட்டு விழா

By செய்திப்பிரிவு

பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியாவும் இணைந்து ‘சுத்தம் சுகாதாரம்’ எனும் இணையவழி விழிப்புணர்வு நிகழ்வை நடத்தின. இதனால் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வைக் கொண்டு செல்ல முடிந்தது.

தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும், தமிழ்நாட்டிலும் கரோனா வைரஸ் தொற்று பரவிவரும் சூழலில், மக்களிடம் மீண்டும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தொடர்ந்து சுகாதாரத்தைக் கடைபிடிக்கத் தூண்டும் நோக்கிலும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் இசையில் ஐந்து விழிப்புணர்வு பாடல்கள் உருவாக்கப்பட்டு, ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’வினால் வெளியிடப்படுகிறது.

நாட்டுப்புற வடிவில் 5 பாடல்கள்: இதில், ‘தமிழ்நாட்டை மேலும் நலமாக்கவாரீர்...’ என்ற பாடலை பாடகர் அசல் கோலார், ‘பள்ளியில் சுகாதாரம்’ என்ற பாடலை பாடகர் வேல்முருகன், ‘சுற்றுச்சூழல் சுகாதாரம்’ என்ற பாடலை அந்தோணிதாசன், ‘கை கழுவுதலின் முக்கியத்துவம்’ என்ற பாடலை இசைவாணி, ‘வீட்டில் சுகாதாரம்’ என்ற பாடலை கிரிஷாங் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்த நிகழ்வு குறித்து ரெக்கிட் தெற்காசியாவின் மூத்த துணைத் தலைவர் கெளரவ் ஜெயின் கூறும்போது, “கலையும் இசையும் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்குவதற்கும் மனிதர்களிடம் நல்ல பண்புகளை வளர்த்தெடுப்பதற்கும் வழிவகுக்கும் சக்திமிக்க கருவியாகும். சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க இசையெனும் கருவியைப் பயன்படுத்தியுள்ளோம்.

வளமான இந்தியாவை உருவாக்க...: சுகாதாரத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் நாட்டுப்புற வடிவிலான இசைப்பாடல்கள் மூலமாக குழந்தைகள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வைக் கொண்டு சேர்க்கிறோம். வளமான இந்தியாவை உருவாக்கிட தன்சுத்தத்தின் அவசியத்தை உணர்த்தும் ரெக்கிட் நிறுவனத்தின் இந்த முன்னெடுப்பு, தேசத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழி வகுக்கும்” என்றார்.

மேலும், ரெக்கிட் (SOA) நிறுவன வெளி விவகாரங்கள் மற்றும் கூட்டாண்மைக்கான இயக்குநர் ரவி பட்னாகர் கூறும்போது, “இசையானது மக்களின் மனங்களை ஒன்றிணைத்து, சமூகத்துக்கு நல்ல பயன்களைத் தருகிற ஒரு வடிவமாகும். புகழ்மிக்க நாட்டுப்புற இசையையும் மற்றும் சிறந்த பண்பாட்டையும் தமிழகம்கொண்டுள்ளதால், இந்த சுகாதார விழிப்புணர்வு பாடல்கள் ஒரு சிறந்த மாற்றத்தை தமிழக மக்களிடம் உருவாக்கும். ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’ மூலமாக நாங்கள் முன்னெடுக்கும் இம்முயற்சியானது அடித்தட்டு மக்களிடம் மாற்றத்தை உருவாக்கி, ஒரு வளமான இந்தியாவை படைக்குமென நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

இந்த சுகாதார விழிப்புணர்வு பாடல்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கூறும்போது, “இந்தியா ஒரு வளர்ந்து வரும் தேசமாகும். ஆனாலும் இன்னும் பல துறைகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். அதில் சுகாதாரமும் ஒன்று.

தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்: ‘டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா’வடமாநிலங்களில் சுகாதாரம் பற்றியவிழிப்புணர்வைக் கொண்டு சென்றதோடு,தற்போது தமிழகத்தில் ஒரு தாக்கத்தைஏற்படுத்தும் வகையில் சுகாதார விழிப்புணர்வு பாடல்களை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முன்னரே சுத்தம் சுகாதாரம் செயல்பாடுகளில் முன்னணியில் உள்ளது. இந்த விழிப்புணர்வு பாடல்கள் அடுத்த கட்டத்தை நோக்கி தமிழகத்தைக் கொண்டு செல்லும்” என்றார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்கவிருக்கிறார்.

மேலும், இவ்விழாவில், சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் அழைப்பிதழ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்கலாம்.

சுகாதார விழிப்புணர்வு பாடல்கள் வெளியீட்டு விழா ஏப்.28-ம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை டிடிகே சாலையிலுள்ள கஸ்தூரி சீனிவாசன் அரங்கில் (மியூசிக் அகாடமி மினி ஹால்) நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE