சென்னை: ரயில் ஓட்டுநர்களுக்கு 9 மணி நேரம் பணி வழங்குவதை அனைத்து மண்டலங்களும் கடைபிடிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம்உத்தரவிட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், ஷாதோல் மாவட்டத்தில் உள்ள சிங்கூர் ரயில் நிலையத்தில் கடந்த 19-ம் தேதி நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது, அதே வழியில் வந்த மற்றொரு சரக்கு ரயில் மோதிவிபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயில் இன்ஜின்கள் தடம்புரண்டு தீப்பிடித்தன. இதில், 4 பேர் காயமடைந்தனர். இந்த விபத்துக்கு சரக்கு ரயில் ஓட்டுநர் 14 மணி நேரம் பணியில் இருந்தது காரணமாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வே உள்பட அனைத்து ரயில்வே மண்டல மேலாளர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ரயில் ஓட்டுநர்களுக்கு 9 மணி நேரம் பணி வழங்குவதை கடைபிடிக்க வேண்டும்.
இருப்பினும், தவிர்க்க முடியாத சில நேரங்களில் மட்டும் கூடுதலாக 2 மணிநேரம் பணியை நீட்டிக்கலாம். இந்த பணி நீட்டிப்பை சம்பந்தப்பட்ட ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இவ்வாறுஅதில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில் ஓட்டுநர்கள் சிலர் கூறியதாவது: 9 மணி நேரம்பணி என்பது புது அறிவிப்பு இல்லை.ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதுதான். ஆனால், ரயில்வே மண்டலங்கள் இதை சரியாக பின்பற்றுவதில்லை.
இதில், இரட்டை நிலைபாடு இருக்கிறது. ரயில்வே வாரியத்தின் இந்த உத்தரவை அனைத்து ரயில்வே மண்டலங்களும் முறையாக கடைபிடித்து, நடைமுறைப்படுத்தினால் மட்டுமே ரயில் ஓட்டுநர்கள் தங்களது பணியை நிம்மதியாக மேற்கொள்ள முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago