தமிழகத்தில் குட்கா தடை தொடரும்: ஐகோர்ட்டின் தடை நீக்க உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் குட்கா தடை தொடர்கிறது.

கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இது தொடர்பான அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப் பொருளாக சுட்டிக்காட்டவில்லை. சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றியே தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க இந்த இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை. தடை விதிக்கும் அதிகாரத்தையும் வழங்கவில்லை. குறிப்பிட்ட வழக்குகளில் நீதிபதிகள், உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து, அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகையிலை தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில், "நாட்டில் உள்ள ஐந்து உயர்நீதிமன்றங்கள், சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் புகையிலைக்கு முழுமையாக தடை விதித்தபோது, அது சரியானது அல்ல என கூறியிருந்தது. மேலும், புகையிலைப் பொருட்கள் வெறும் மெல்லும் பொருட்கள் தானேதவிர, அவை விழுங்கப்படுவதில்லை என்பதால் அவற்றை உணவுப் பொருட்களாக கருதக்கூடாது. தமிழ்நாடு அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி புகையிலை, குட்கா பொருட்களை தடை செய்துள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது" என்று வாதிடப்பட்டது.

அப்போது தமிழக அரசுத் தரப்பில், "கடுமையான சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்தும் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை தடை செய்வது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்ய ஏற்கெனவே மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. அதனடிப்படையில்தான் தமிழ்நாட்டில் சுகாதார கண்ணோட்டத்துடன் புகையிலை, குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்டது. புகையிலை நிறுவனங்கள் வர்த்தக நோக்கில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதி கோருகிறார்கள். ஆனால் மக்களின் சுகாதாரத்தை மனதில் கொண்டு அரசு அதற்கு தடை விதித்திருக்கிறது. சில தனி நபர்களுடைய லாபத்திற்காக பொதுமக்களின் சுகாதாரத்தில் அரசு சமரசம் செய்து கொள்ள முடியாது.
புகையிலைப் பொருட்களை மக்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்காக செலவு செய்வதும் அதற்காக அரசுகள் செலவு செய்வதும் விரயமாகும்" என்று வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதிகள், புகையிலைப் பொருட்கள்கூட உணவுப் பொருட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறதா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழக அரசு, இத்தகைய புகையிலைப் பொருட்களை ஏதாவது ஒரு உணவு பொருளுடன் கலந்து பயன்படுத்தப்படுகிறது அது உடல் நலத்துக்கு கடும் தீங்கை விளைவிக்கும்" என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்த தமிழ்நாடு அரசின் முடிவு சரியானதுதான் என்றும், எனவே தமிழ்நாடு அரசின் முடிவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், பாதிக்கப்பட்ட புகையிலை நிறுவனங்கள் உரிய அமைப்புகளை நாடி தங்களுக்கு தேவையான நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்