பாஜக உறுப்பினர் எண்ணிக்கையை அண்ணாமலை முதலில் சொல்லட்டும்: செந்தில் பாலாஜி

By செய்திப்பிரிவு

கோவை: தமிழ்நாட்டை பொருத்தவரை கோடை காலத்தில் எவ்வளவு மின்தேவை ஏற்படுகிறதோ அதை முழுமையாக சமாளிக்கக் கூடிய வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் தயாராக உள்ளது என அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் உச்சபட்ச மின்தேவை என்பது வரலாறு காணாத அளவுக்கு 19 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. இருப்பினும் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே அதற்கான ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டு, குறைந்த விலைப்புள்ளியில் அவசர தேவைக்கு ரூ.8-க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த ஒப்பந்தப்புள்ளி மூலமாக தமிழ்நாடு மின்வாரியம் இந்த 3 மாதத்தில் மட்டும் ரூ.1,313 கோடி சேமித்துள்ளது. இதற்கு முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் காரணம்.

இன்னும் கூடுதலாக மின் தேவை ஏற்பட்டாலும் அதை சமாளிப்பதற்கு மின்வாரியம் தயாராகவே உள்ளது. எனவே, தமிழ்நாட்டை பொருத்தவரை கோடை காலத்தில் எவ்வளவு மின்தேவை ஏற்படுகிறதோ அதை முழுமையாக சமாளிக்கக் கூடிய வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் தயாராக உள்ளது.

அரசின் மீது அவதூறு பரப்ப வேண்டும் என சிலர் பொதுவான கருத்துகளை, செய்திகளை பரப்புகின்றனர். மின்குறைபாடு தொடர்பாக சமூகவலைதளங்களில் கருத்து பதிவிடும் போது, மின்இணைப்பு எண்ணுடன் பதிவு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்.

ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என்பதற்கும், சொத்துப் பட்டியலை வெளியிடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலை ஊழலுக்கும், சொத்துப் பட்டியலுக்கும் உள்ள வித்தியாசத்தை படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.பாஜக உறுப்பினர் எண்ணிக்கை என்ன என்பதை தெரிவித்துவிட்டு அடுத்தகட்டத்துக்கு செல்லட்டும்.

சென்னைக்கு இணையான வளர்ச்சியை கொடுத்து கோவைக்கு முதல்வர் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வித்தியாசம் பார்க்காமல் 234 தொகுதிகளுக்கும் ஒரே மாதிரியான வளர்ச்சித் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

அரசுக்கு எதிராக களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துகளை வெளியிடுபவர்கள் யாராக இருந்தாலும் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடரப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்