குடிமங்கலம் வட்டாரத்தில் 60 ஏக்கர் வாழை சேதம் - பல லட்சம் இழப்பால் விவசாயிகள் கவலை

By செய்திப்பிரிவு

உடுமலை: உடுமலை தாலுகாவுக்கு உட்பட்ட குடிமங்கலம் வட்டாரத்தில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 100 ஏக்கர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உணவு பரிமாறுவதற்கான இலை, வாழை பழங்கள் தேவையில், குடிமங்கலம் வட்டார விவசாயிகள் பெருமளவு பங்களிப்பு செய்து வருகின்றனர்.

உடுமலை, பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட ஊர்களிலுள்ள சந்தைகளுக்கு அனுப்பி, விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் கடந்த 22, 23-ம் தேதிகளில் திடீரென பெய்த கோடை மழையால், பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் சேதமாகின. குடிமங்கலம் வட்டாரத்தில் வாழை சாகுபடி செய்த நிலங்கள் பெருமளவு பாதிப்புக்குள்ளானது.

ஆமந்தகடவு, ஆத்துக்கிணத்துப்பட்டி, குப்பம்பாளையம், பெரியபட்டி, அணிக்கடவு, வாகத்தொழுவு, மூங்கில்தொழுவு, இலுப்பநகரம் உட்பட பல்வேறு கிராமங்களில் நடவு செய்யப்பட்டிருந்த வாழை மரங்கள், பலத்த காற்றால் உடைந்து விழுந்தன. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, "வாழை சாகுபடி செய்த அனைவருக்குமே கோடை மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மரங்கள் சாய்ந்துவிட்டன. எஞ்சிய ஓரிரு மரங்களையும் அழிக்க வேண்டியதுதான். இதேபோல பப்பாளி மரங்களும் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது. இதன்மூலமாக, விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு விரைவாக நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்" என்றனர்.

தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் கோபிநாத் கூறும்போது, "மழை மற்றும் காற்றால் சுமார் 60 ஏக்கரில் வாழையும், 7 ஏக்கரில் பப்பாளி மரங்களும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் தரப்பில் இருந்து வரும் தகவலின் அடிப்படையில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, உடனுக்குடன் பாதிப்பு தொடர்பான அறிக்கைகளும் அரசுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இழப்பீடு தொடர்பாக வருவாய் துறையினர் தான் முடிவு செய்து வழங்குவார்கள்" என்றார்.

வருவாய் துறையினர் கூறும்போது, "வேளாண் மற்றும் தோட்டக்கலைத் துறையினர் மூலமாக, பயிர் பாதிப்பு குறித்த அறிக்கைகள் வரப்பெற்றுள்ளன. கிராம நிர்வாக அலுவலர்கள் மூலமாகவும் ஆய்வு நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. முழுமையாக வந்த பின், ஆட்சியர் மூலமாக தேவையான இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்