சென்னை | ஏசி இயங்காததால் ரயிலை நிறுத்திய பயணிகள்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து ஹூப்ளி வரை செல்லும் அதிவிரைவு ரயில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டது. அந்த ரயிலில் பி-3 பெட்டியில் குளிர்சாதனம் (ஏசி) இயங்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர்.

உடனே , ரயில்வே அதிகாரிகள், ஆர்.பி.எஃப் படையினர் பி-3 பெட்டிக்கு விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது ஏசி இயங்கவில்லை என்றும், இதை சரி செய்ய வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, ரயிலில் பழுதான ஏசி பெட்டியை சரி செய்யும் பணி நடைபெற்றது. 10 நிமிடங்களில் ஏசி பழுது சரி செய்யப்பட்டு, மீண்டும் அந்த ரயில் புறப்பட்டு சென்றது. இந்த ரயில் தாமதமாக புறப்பட்டதால், 4 ரயில்கள் வந்து செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்