சென்னை: தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலைக்காக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத் திருத்த மசோதா குறித்து தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி, தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா கடந்த 21-ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. சட்டப்பேரவையில் ‘2023-ம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்த) சட்ட மசோதா (மசோதா எண் 8/2023)’ தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் குறித்தும், மத்திய அரசின் தொழிலாளர் நல சட்டத்தில் இருந்து, தமிழக அரசு தற்போது முன்மொழிந்துள்ள இந்த சட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை விளக்கி கூறி, இந்த திருத்தத்தால் தமிழகத்துக்கு கூடுதலாக வரக்கூடிய முதலீடுகள், பெருகும் வேலைவாய்ப்புகள் குறித்தும், சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சரும், தொழில் துறை அமைச்சரும் விரிவாக விளக்கம் அளித்தனர்.
» ஆடியோ விவகாரம் | ‘போலியானது’ - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்
» IPL 2023 | ஸ்டம்புகளை உடைத்தெறிந்த அர்ஷ்தீப் சிங்கின் வேகம்: மும்பையை வீழ்த்திய பஞ்சாப்!
இருப்பினும், இந்த மசோதா குறித்து தொழிலாளர் சங்கங்கள் சில கருத்துகளை தெரிவித்து வருவதால், ஏப்.24-ம் தேதி (நாளை) மதியம் 3 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுப்பணி துறை அமைச்சர், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர், தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறை அமைச்சர், தலைமைச் செயலர், தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டு துறைசெயலர், தொழிலாளர் நலத் துறைஆணையர் ஆகியோர் முன்னிலையில் தமிழகத்தின் முக்கிய தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago