அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி 26-ம் தேதி டெல்லி பயணம்: அமித் ஷாவை சந்திக்க திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஏப்.26-ம் தேதி டெல்லி செல்கிறார். அன்று உள்துறை அமைச்சர்அமித் ஷாவை சந்தித்து 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக விவாதிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட சட்டப் போராட்டங்களுக்கு நடுவே அதிமுக பொதுச்செயலாளர் பதவியை பழனிசாமிகைப்பற்றியுள்ளார். அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது.

இந்நிலையில், பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக, வரும் 26-ம்தேதி பழனிசாமி டெல்லி செல்கிறார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த சந்திப்பில், கர்நாடக மாநில தேர்தலில் அதிமுகவை கூட்டணியில் சேர்க்காதது, அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பாக நிலவும் உறுதியற்ற நிலை, தமிழக பாஜக நிர்வாகிகள் அதிமுகவை தொடர்ந்து விமர்சித்து வருவது, 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணி நிலைப்பாடு, தொகுதி பங்கீடு போன்றவை குறித்து அமித் ஷாவுடன் பழனிசாமி விவாதிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், மக்களவையில் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.யாக அங்கீகரிக்கக் கூடாது என அதிமுக சார்பில் ஏற்கெனவே கொடுத்த கடிதத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. அதன்மீது நடவடிக்கை எடுக்கக் கோருவது, தம்பிதுரை போன்ற மூத்த தலைவர் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கோருவது உள்ளிட்டவை தொடர்பாகவும் விவாதிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்