கும்பகோணம் | கத்தியால் தாக்கப்பட்ட திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் உயிரிழப்பு

By சி.எஸ். ஆறுமுகம்

கும்பகோணம்: கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரத்தில் கத்தியால் குத்தி தாக்கப்பட்ட திமுக ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் உயிரிழந்தார்.

பட்டீஸ்வரம், அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் ராஜேந்திரன் (65). இவர் பட்டீஸ்வரம் 4-வது திமுக வார்டு உறுப்பினராகவும், ஊராட்சி மன்ற துணைத் தலைவராகப் பதவி வகித்து வந்தார். ராஜேந்திரனுக்கும், இவரது சகோதரர் ராஜ் மகன் குமார்(40) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 18-ம் தேதி இரவு கடைத்தெருவில் நின்றிருந்த ராஜேந்திரனை, கத்தியால் கழுத்து மற்றும் முகத்தில் குமார் குத்தினார். இதில், பலத்த காயமடைந்த ராஜேந்திரனை, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து பட்டீஸ்வரம் போலீஸார், வழக்குப் பதிந்து குமாரை கடந்த 19-ம் தேதி கைது செய்து புதுக்கோட்டை சிறையிலடைத்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன் இன்று உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்