சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜன.9-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜன.13 வரை நடந்தது. அத்துடன், பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
2023-24-ம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் கடந்த மார்ச் 20-ம் தேதியும், வேளாண் பட்ஜெட் 21-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 23-ம் தேதி முதல் 28-ம் தேதி வரைநடந்தது. நிறைவு நாளில் நிதித்துறை, வேளாண் துறை அமைச்சர்களின் பதில் உரை இடம் பெற்றது.
மார்ச் 29-ம் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், 21 நாள் பேரவை அலுவல்கள் நேற்றுடன் முடிந்தன. இதனைத் தொடர்ந்து, மீண்டும் கூடும் தேதி குறிப்பிடாமல் பேரவையை ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.
» ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
» 12 மணி நேர வேலை: வரும் 24 ஆம் தேதி தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு ஆலோசனை
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் வரும் மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பட்ஜெட்டில் வெளியான திட்டங்களை நடைமுறைப்படுத்துவது மற்றும் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago