ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? - பேரவையில் முதல்வர் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரில் நேற்று முதல் காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதன்படி, நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆருத்ரா நிதி நிறுவன மோசடி, வேங்கைவயல் விவகாரம், பல்வீர் சிங் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்.21) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசி வருகிறார்.

அப்போது பேசிய அவர், பிற மாநிலங்களில் நடந்த சம்பவங்களை தமிழ்நாட்டில் நடந்தது போல சித்தரித்து புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்திகள் பரப்பப்பட்டன; உடனடியாக ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தினேன். பிஹார் முதலமைச்சர் நிதிஷ் குமாரை தொடர்புகொண்டு புலம் பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உறுதி அளித்தேன்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்? அதை மட்டும் எதிர்க்கட்சி தலைவர் ஏன் சொல்லவே மறுக்கிறார்? முதலமைச்சராக இருந்த போதும் சொல்லவில்லை, இப்போதும் சொல்லவில்லை" என்று வினவினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE