எதிர்க்கட்சித் தலைவர் உரையை நேரலை செய்யாததால் சட்டப்பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் உரையை நேரலை செய்யாத காரணத்தால், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிலுரையின் போது அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கூட்டத் தொடரில் நேற்று முதல் காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது. இதன்படி, நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, ஆருத்ரா நிறுவன மோசடி, வேங்கைவயல், பல்வீர் சிங் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்று (ஏப்.21) காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசத் தொடங்கினார். முதல்வர் பதிலுரையின் போது அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுகவினருக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்க்கட்சி தலைவர் உரையை நேரலை செய்யாத காரணத்தால் வெளிநடப்பு செய்ததாக அதிமுக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE