சென்னை: கோவை உக்கடம் அருகேயுள்ள, கோட்டைமேட்டில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே, கடந்தாண்டு அக்.23-ம் தேதி கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டிய ஜமேஷா முபின் (28) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முபின், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர் என்றும், காரில் வெடிமருந்துகளை நிரப்பி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதும், எதிர்பாராத விதமாக காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்ததும் தெரியவந்தது. இந்த வழக்கு என்.ஐ.ஏவுக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில் முகமது அசாருதீன், முகமது தல்கா, பெரோஸ் இஸ்மாயில், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகியோர் முதல் கட்டமாக கைது செய்யப்பட்டனர். தொடர் விசாரணைக்கு பிறகு உமர் பாரூக், பெரோஸ்கான், முகமது தவுபீக், ஷேக் இதாயத்துல்லா, சனோபர் அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுவரை இந்த வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த முபின் மற்றும் கைது செய்யப்பட்ட 10 பேர் என மொத்தம் 11 பேர் இவ்வழக்கில் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, கார் வெடிப்பில் உயிரிழந்த மற்றும் கைது செய்யப்பட்ட நபர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக முதல் கட்ட குற்றப்பத்திரிகையை என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தனர்.
இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறுகையில், ‘கார் வெடிப்பில் உயிரிழந்த முபின், கைது செய்யப்பட்ட முகமது அசாருதீன், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில், அப்சர்கான் ஆகிய 7 பேர் மீது குற்றப்பத்திரிகையை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம்.
மீதம் உள்ளவர்கள் மீதும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago