சென்னை: பைக் டாக்சிகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆட்டோஓட்டுநர்களுக்கு போக்குவரத்துத் துறை ஆணையர் இல.நிர்மல்ராஜ் அழைப்பு விடுத்திருந்தார். சென்னை, எழிலகத்தில் வாடகை வாகன ஓட்டுநர்கள், ஆட்டோஓட்டுநர்களின் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆணையரை சந்தித்தனர்.
அப்போது ஆணையர் கூறியதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்ததாவது: பைக் டாக்சிகளை அனுமதிக்கவும், தடுக்கவும் சட்டமில்லை. அதே நேரம், சொந்தபயன்பாட்டுக்கான வாகனங்களை வணிக நோக்கில் ஈடுபடுத்துவது சட்டத்துக்குப் புறம்பானது. அதன் அடிப்படையில் பைக் டாக்சி இயக்குவோரிடம் இருந்து வாகனங்கள் பறிமுதல் செய்வதோடு, ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது.
இதுவரை சென்னையில் 26 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சம்பந்தப்பட்ட நிறுவன பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்தி, வழிகாட்டுதல்கள் வெளியாகும் வரை பைக்டாக்சிகளை இயக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். 5 நாட்களுக்குள் முழுமையாக பைக் டாக்சிகள் நிறுத்தப்படும். இவ்வாறுஆணையர் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தொழிற்சங்கத்தினர் தரப்பில், ``5 நாட்களுக்குள் பைக் டாக்சி இயக்கத்தை முழுமையாக கட்டுப்படுத்த தவறினால் அவர்களை பிடித்து வந்து வட்டாரபோக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளோம்'' என்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தொழிற்சங்கத்தினர் கூறுகையில், ``5 நாட்களுக்குள் பைக் டாக்சிகளை முழுமையாக தடை செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்'' என்றனர்.
பேச்சுவார்த்தையில், சிஐடியு, ஏஐடியுசி, உரிமைகுரல், உரிமை கரங்கள், எஸ்டிடியு, சாலை போக்குவரத்து உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago