சென்னை: தேர்தல் ஆணைய தீர்ப்பின் மூலம் தர்மம் வென்றுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மேலும், தற்போது எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாயை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரித்து தேர்தல் ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. தேர்தல் ஆணைய தீர்ப்பின் மூலம் தர்மம் வென்றுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வெற்றி என்ற வரலாற்று சாதனையை படைப்போம். 2026-ம் ஆண்டு ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைவதற்கு இந்தத் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக அமைந்து உள்ளது. அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். மக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர்" என்று அவர் கூறினார். | வாசிக்க > அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தலைமைத் தேர்தல் ஆணையம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago