சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், பெருந்துறை நிவேதா கலை மற்றும் கைவினைக் கழகத்துடன் இணைந்து, இணைய வழியில் நடத்தும் ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் வரும் ஏப்.28-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கி, 3 நாட்கள் நடைபெற உள்ளது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அனைவருக்கும் பயன்படும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை இணைய வழியில் தொடர்ந்து முன்னெடுத்து நடத்தி வருகிறது.
8 வயதுக்கு மேற்பட்டோர்..: அதன் ஒரு பகுதியாக, ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கு 3 நாட்கள் நடத்தப்படுகிறது. இந்த பயிலரங்கு வரும் ஏப்.28, 29, 30 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய 3 நாட்களும் தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் 8 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம். ஓரிகாமி பயிலரங்கை நடத்த உள்ள நிர்மல் குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஓரிகாமி பயிற்சிகளை திறம்பட நடத்தி வருபவர். இந்த பயிலரங்கில் 10-க்கும் மேற்பட்ட கைவினைப் பணிகளை அவர் கற்றுத்தர உள்ளார்.
இதில் பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/origami என்ற லிங்க்கில், 3 நாட்களுக்கும் சேர்த்து ரூ.353/- (ஜிஎஸ்டி உட்பட) மட்டும் பதிவுக் கட்டணம் செலுத்தி, பதிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 8248751369 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago