முன்னாள் எம்எல்ஏக்களின் ஓய்வூதியம், மருத்துவப் படி உயர்வு: முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்த வேண்டுமென உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, முன்னாள் சட்டப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு வரக்கூடிய மாத ஓய்வூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக, கலைஞர் நூற்றாண்டு விழாவைமுன்னிட்டு, ஜூன் மாதம் முதல் உயர்த்தப்படும்.

அதேபோல், குடும்ப ஓய்வூதியம் மாதம் ஒன்றுக்கு ரூ.12,500 என்பது, ரூ.15 ஆயிரமாக உயர்த்தப்படும். தற்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப் படி ரூ.50 ஆயிரம் என்பது ரூ.75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்