இலங்கையை சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை

By செய்திப்பிரிவு

ராமேசுவரம்: இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால் கடந்த ஓராண்டில் 233 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கை வவுனியா மாவட்டம் தேக்கன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் (33), அவரது மனைவி ரூபலட்சுமி (26), குழந்தைகள் ஹேம்சரண் (7), யோஷனா (4), தர்ஷான் (2) ஆகியோர் தலைமன்னாரிலிருந்து கடந்த செவ்வாய்க்கிழமை பைபர் படகில் புறப்பட்டு நேற்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு வந்தனர்.

அங்கிருந்து அவர்களை மீட்ட மெரைன் போலீஸார், மண்டபம் மெரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

விசாரணையில், பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாழ வழியின்றி தமிழகத்துக்கு வந்ததாகவும், தங்களை படகில் அழைத்து வந்து விட்டுச் சென்றவர்களுக்கு இலங்கை பணம் ரூ.1 லட்சம் வழங்கியதாகவும் தெரிவித்தனர்.

இதுவரை 238 பேர்: இதையடுத்து 5 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து பொருளாதார நெருக்கடிக்குப் பின்பு வந்த அகதிகளின் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்