மதுரை: “சொத்துப் பட்டியல் விவகாரத்தில் நானும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நிச்சயம் வழக்கு தொடருவேன். அவர் பதில் சொல்லியாக வேண்டும்” என்று கனிமொழி எம்.பி கூறினார்.
தூத்துக்குடி செல்ல சென்னையிலிருந்து விமானம் மூலம் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி இன்று ( ஏப்.19) மாலை மதுரைக்கு வந்தார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுகவினருக்கு எதிராக சொத்துப் பட்டியல் குறித்து தகவல் வெளியிட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு திமுக வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நிச்சயமாக நானும் வழக்கு தொடர்வேன். அதற்கு அவர் பதில் சொல்லவேண்டும்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஸ்டெர்லைட்டை எதிர்த்து திமுக அரசு தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்காடுகிறது. மக்களின் குரலை எதிரொலிக்கிறோம். நிச்சயமாக நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்” என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago