தமிழகத்தின் மின் தேவை 19,000 மெகாவாட் ஆக உயர வாய்ப்பு: கடந்த 12 ஆண்டுகளில் 7,000 மெகாவாட் அதிகரிப்பு

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: தமிழகத்தின் மின் தேவை 19 ஆயிரம் மெகாவாட் ஆக உயர வாய்ப்பு உள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கடந்த 12 ஆண்டுகளில் மின் தேவை 7 ஆயிரம் மெகாவாட் வரை அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் தற்போதைய மின் தேவை 16,500 மெகாவாட்டிலிருந்து 17,500 மெகா வாட் வரை உள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் மேலும் அதிகரித்து 17,000 மெகாவாட்டிலிருந்து 18,100 மெகாவாட் ஆக அதிகரிக்கலாம் என்று ஏற்கெனவே மின்சார வாரியம் தெரிவித்து இருந்தது. ஆனால், மின் தேவை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன்படி கடந்த 18-ம் தேதி தமிழகத்தின் மின் தேவை 18,882 மெகாவாட் ஆக இருந்தது. இனி வரும் நாட்களில் இது 19 ஆயிரம் மெகாவாட் ஆக அதிகரிக்கலாம் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 10 ஆண்டுகளில் மின் தேவை:

கோடைக்கால உச்சபட்ச மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு அனல், புனல் மின் நிலையங்கள், மாநில மற்றும் மத்திய தொகுப்புகள், காற்றாலைகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள், நீண்ட மற்றும் நடுத்தர கால கொள்முதல் ஒப்பந்தங்கள், மின் உற்பத்தி அதிகமாக இருக்கும் காலங்களில் மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை பரிமாற்ற முறையின் கீழ் வெளி மாநிலங்களுக்கு கொடுத்ததன் அடிப்படையில் உள்ளிட்ட பல்வேறு வகையில் மின்சாரத்தைப் பெற தமிழக அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE