சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நடந்த சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்கப்படுமென 2021-ம் ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி அறிவித்து, சட்ட மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
அதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நீண்ட நாட்களாக வைத்திருந்தார். அதில் சில விளக்கங்களை கேட்டிருந்தார். அதற்கு தகுந்த பதில் தெரிவிக்கப்பட்டது.
விளக்கங்களுக்குப் பதில்: இந்நிலையில், மீண்டும் சில விளக்கங்களை கேட்டார். அதற்கும் தகுந்த பதில் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வேண்டுமென்று பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஆளுநர் ஏற்க வேண்டும். தமிழக சுகாதாரத்துறைக்கு கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட விருதுகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு முதல்வரின் வழிகாட்டுதல்படி சுகாதாரத் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago