திருப்பூர்: திருப்பூர் அங்கேரிபாளையத்தில் கடந்த ஆண்டு நவ.11-ம் தேதி உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த கபீர் உசேன் (35), ஆசாத் மியா (29), ரஷீத் மொல்லா (30) ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் நேற்று தீர்ப்பளித்தார். அதில், 3 பேரும் சிறையில் இருந்த காலத்தை கழித்து, திருப்பூர் மாநகர காவல் ஆணையர், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியோடு 3 பேரையும் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டுமெனதீர்ப்பளித்தார். அதுவரை அவர்கள் 3 பேரையும் திருச்சி வெளிநாட்டினர் முகாமில் போலீஸாரின் பாதுகாப்புடன் தங்க வைக்கவும் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு அரசு வழக்கறிஞர் எஸ்.கனகசபாபதி ஆஜராகி வாதாடினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago