4,133 பணியிடங்களுக்கு தேர்வு; சுகாதார நிலையங்களில் சிசிடிவி - தமிழக மருத்துவத் துறையின் புதிய அறிவிப்புகள்

By செய்திப்பிரிவு

சென்னை: "மருத்துவம் சார்ந்த 4,133 காலிப் பணியிடங்களுக்கான நபர்கள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்படுவர்" என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில் முக்கிய அறிப்புகளின் விவரம்: * அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், சித்தா, ஓமியோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவ நிலையங்களில் ரூ.917.66 கோடியில் புதிய மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.

* அனைத்து மாவட்டங்களிலும் 8 கி.மீ தூரம் கொண்ட நடைபாதைகள் கண்டறியப்பட்டு உள்ளூர் மக்களுடன் இணைந்து மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை சுகாதார நடைபயிற்சி (Health Walk) மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு மருத்து முகாம்கள் நடத்தப்படும்.

அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, திருவள்ளூர், விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள 13 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மகப்பேறு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் ரூ.6.88 கோடியில் ஏற்படுத்தப்படும்.

* மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் ஹீமோகுளோபினோபதி நோய் கண்டறியும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, இந்நோய்க்கான உயிர் காக்கும் உயர்ரக மருந்துகள் ரூ.40 கோடியில் வழங்கப்படும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE