ஈரோடு: பொதுமக்களிடம் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை, முதியவர் ஒருவர், ஈரோடு ஆட்சியர் அலுவலகம் மூலமாக முதல்வர் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உன்னி தலைமையில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல் பாண்டியன் (73) என்ற முதியவர், முதல்வர் பொது நிவாரண நிதிக்காக ரூ.10 ஆயிரம் பணத்தை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் கூறியதாவது: மும்பையில் சிறிது காலம் வேலை பார்த்தபின், தமிழகத்தின் கன்னியாகுமரி, ராமேசுவரம், பாபநாசம் போன்ற பல்வேறு பகுதிகளில் யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறேன். இவ்வாறு யாசகம் பெறும் பணத்தில், எனக்கான சிறு செலவு போக, மீதமுள்ளவற்றை, அந்தந்த பகுதி ஆட்சியர் அலுவலகம் மூலம், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு கொடுத்து வருகிறேன்.
கரோனா காலகட்டத்தில் மதுரையில் யாசகம் பெற்ற பணத்தில், பலருக்கு உதவி செய்தேன். இதுவரை யாசகம் மூலம் சேர்ந்த பணத்தில் ரூ. 55 லட்சத்தை நிதி உதவியாக வழங்கி உள்ளேன். தமிழ்நாட்டில் இதுவரை 400 அரசு பள்ளிகளுக்கு நாற்காலி, மேஜைகள், ஆர்.ஓ. வாட்டர் போன்ற வசதிகள் செய்து கொடுத்துள்ளேன்.
ஈரோடு மாவட்டத்திற்கு தற்போது முதல் முதலாக வந்துள்ளேன். தற்போது என்னிடமிருக்கும் ரூ. 10 ஆயிரத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளேன். இந்த பணியை தொடர்ந்து செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago