தமிழகத்தில் நீர்நிலை உயிரிழப்புகளைத் தடுக்க நடவடிக்கை: தினகரன் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: “நீர்நிலைகளில் மூழ்கி இனி யாரும் பலியாகக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அமமுக பொதுச் செயலாளர தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நீர்நிலைகளில் மூழ்கி சிறுவர்கள், இளைஞர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகள் வேதனையளிக்கின்றன. நீர்நிலைகள் முறையாக தூர்வாரப்படாததும், சட்டத்துக்குப் புறம்பாக அளவுக்கு அதிகமாக மணல் அள்ளப்படுவதும் உயிர் பலி ஏற்படுவதற்கு காரணம் என அந்தந்தப் பகுதி மக்கள் கருதுகின்றனர்.

மேலும், தமிழகத்தில் உள்ள பெரிய நீர்நிலைகளில் எச்சரிக்கை பலகைகள் வைப்பதுடன், சிறிய நீர் நிலைகளில் அந்தந்த கிராமங்களில் குழுக்களை உருவாக்கி முறையாக கண்காணிப்பிலும் ஈடுபட வேண்டும். நீர்நிலைகளில் மூழ்கி இனி யாரும் பலியாகக் கூடாது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழக அரசு உடனே நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்" என்று தினகரன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்