தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் எந்த அடிப்படை பணிகளும் சரியாக நடைபெறவில்லை என திமுக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் 20-ம் தேதி திமுக கவுன்சிலர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெறுகிறது.
தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்ட பின் 70 வார்டுகள் அமைக்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் 55-க்கும் மேற்பட்ட இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றி திமுக சார்பில் மேயர் வசந்தகுமாரி தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் பதவியேற்று ஓராண்டு கடந்தும் தாம்பரம் மாநகராட்சியில் எந்தப் பணிகளும் சரிவரநடைபெறவில்லை என திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவருகின்றனர். தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் மக்களிடம் கெட்ட பெயர் வாங்கிவருவதாகவும், இதே நிலை நீடித்தால் வரும் மக்களவை தேர்தலில் திமுகவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்படும் எனவும் திமுகவினர் கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக தொகுதி அமைச்சரும் மாவட்ட செயலாளருமான தா.மோ.அன்பரசனிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் தாம்பரம் மாநகராட்சியின் திமுக மாமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் வரும் 20-ம் தேதி அமைச்சர் அன்பரசன் தலைமையில் குரோம்பேட்டையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்துஉறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago