சென்னை: மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளதால் மீன்களின் விலை அதிகரித்துள்ளது. கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில், தமிழகத்தில் ஆண்டுதோறும் 61 நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் ஏப்.15-ம் தேதி தொடங்கியது. வரும் ஜுன் 14-ம் தேதி வரை61 நாட்களுக்கு அமலில் இருக்கும்.
இதையொட்டி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர்,நாகை உள்ளிட்ட 14 மாவட்டங்களைச் சேர்ந்த, 15 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல், மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், சென்னை காசிமேட்டில் மீன் வாங்கஏராளமானோர் திரண்டனர். எனினும், மீன்பிடித் தடைக் காலம் தொடங்கி இருப்பதால், மீன்களின்விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மீன்கள் வரத்து குறைந்தது: இதுகுறித்து காசிமேடு மீனவர்கள் கூறும்போது, “தடைக் காலங்களில் மீன்களின் வரத்து குறைவதால், ஃபைபர் மற்றும் கட்டுமரங்களில் வரும் மீன்களே விற்பனை செய்யப்படும்.
» இந்தியாவின் மருந்து தர விதிமுறைகள் சர்வதேச தரத்தில் இருக்க வேண்டும் - நிதி ஆயோக் பரிந்துரை
இதனால், நேற்று முன்தினம் ரூ.800-க்கு விற்கப்பட்ட வஞ்சிரம் ரூ.1,000-க்கு விற்கப்படுகிறது. இதேபோல, சங்கரா மீன் ரூ.350-ல்இருந்து ரூ.400-ஆகவும், இறால்ரூ.300-ல்இருந்து ரூ.400-ஆகவும், சீலா மீன் ரூ.600-ல் இருந்து ரூ.700-ஆகவும் விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் மீன்களின் விலை மேலும் அதிகரிக்கும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago