கும்பகோணம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு நரிக்குறவர் நலவாரிய உறுப்பினர் த. சுந்தர் ராஜன் விடுத்துள்ள அறிக்கையில், "நாம் தமிழர் கட்சி சீமான், நரிக்குறவ இன மக்களைக் கேவலப்படுத்தியும், இவர்கள் நரிக்குறவர்கள் அல்ல, வந்தேறிகள் என தவறான தகவல்களைப் பேசி, எங்களைத் தொடர்ந்து இழிவு படுத்திக் கொண்டே இருக்கிறார். மேலும், எங்கள் சமுதாய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வேலைகளைச் செய்து வருகிறார்.
இதே போல், தேனி மாவட்டத்தில் வழங்கப்பட்ட இடத்தில் வசிக்கும் எங்கள் சமூதாய மக்களிடையே உள்ள ஒற்றுமையைச் சீர்குலைத்து, பிரிவினையை ஏற்படுத்தும் நாம் தமிழர் கட்சி சீமான் மற்றும் வனவேங்கை கட்சி இரணியன் ஆகியோரை கண்டித்து வரும் 30ம் தேதி அதே மாவட்டத்தில், தமிழகத்திலுள்ள அனைத்து நரிக்குறவர் மக்களையும் திரட்டி போராட்டம் நடத்தவுள்ளோம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலின் போது, எங்கள் சமுதாய மக்களிடம் வாக்கு சேகரிக்க, அவர் வந்தால், கருப்புக் கொடி காண்பித்து புறக்கணிப்போம். எனவே, நரிக்குறவர் மக்கள் வசிக்கும் அனைத்து மாவட்டங்களிலும், சீமானை கண்டித்து விரைவில் போராட்டம் நடத்தி, அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களிடம், அவரை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி புகாரளிக்கவுள்ளோம். மிகவும் அடித்தட்டு மக்களான எங்கள் சமுதாயத்தைத் தொடர்ந்து இழிவுபடுத்தி பேசுவதை சீமான் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago