சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தனியார் நிறுவனம் மூலம் ஓட்டுநர்களை நியமிக்க ஒப்புதல் வழங்கியதையடுத்து, ஓராண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் 400 ஓட்டுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு தொழிற்சங்கத்தினர் கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையே, மாநகர போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் 520 ஓட்டுநர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு, அவர்கள் விரைவில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதேபோல் கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் 100 ஓட்டுநர்களைத் தனியார் மூலம் நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதுபோன்று ஒப்பந்த முறையில் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதைக் கண்டித்து வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்க சிஐடியு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க (சிஐடியு) பொதுச் செயலாளர் எம்.கனகராஜ் கூறியதாவது: விரைவு போக்குவரத்துக் கழகம், மாநகர (சென்னை), கும்பகோணம் போக்குவரத்துக் கழகங்களில் தனியார் நிறுவனங்களின் ஓட்டுநர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட உள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் போக்குவரத்துக் கழக நலன்களுக்கு உகந்தது அல்ல. இந்த செயல்பாடுகளால் போக்குவரத்துக் கழகங்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடும்.
மேலும், இது ஒப்பந்தத் தொழிலாளர் சட்டத்துக்கு எதிராகவும், ஊதிய ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரத்துகளுக்கு முரணாகவும் உள்ளது. இதுபோன்ற தனியார்மய நடவடிக்கையை சிஐடியு எப்போதும் ஏற்காது. எனவே, இந்த முடிவைக் கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் (சிஐடியு)கீழ் செயல்படும் 20 சங்கங்களின்சார்பில் வரும் 18-ம் தேதி வேலைநிறுத்த நோட்டீல் வழங்க உள்ளோம். அன்றைய தினம் விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பணிமனைகளின் முன்பும் கண்டன வாயிற்கூட்டம் நடத்த இருக்கிறோம்.
» சாலை சீரமைப்பு பணியின்போது விபத்தில் பெண் உயிரிழப்பு - ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
அரசு போக்குவரத்துக் கழகங்களை பாதுகாப்பது அரசின் கடமை. எனவே, காலி பணியிடங்களை நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு விரைந்து நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago