சேலத்தில் வெயிலின் தாக்கம் 103.7 டிகிரி; ஈரோட்டில் 105 டிகிரி பதிவு

By செய்திப்பிரிவு

சேலம் / ஈரோடு: சேலத்தில் வெயிலின் தாக்கம் 103.7 டிகிரியாக நேற்று பதிவானது. ஈரோட்டில் 105 டிகிரியை தொட்டது. கோடை காலம் தொடங்கியதில் இருந்தே, சேலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வந்தது. குறிப்பாக, பகல் நேர அதிகபட்ச வெப்பநிலை, 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறையாமல் இருந்தது. இந்நிலையில், நடப்பாண்டு கோடையில் முதல்முறையாக நேற்று முன்தினம் 105.5 டிகிரி பாரன்ஹீட்டாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இந்நிலையில் நேற்று, அதிகபட்ச வெப்பம் 103.7 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. எனினும், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் இருந்ததால், சாலைகளில் அனல் காற்று வீசியது.

ஈரோட்டில் 105 டிகிரி பாரன்ஹீட்: ஏப்ரல் மாத தொடக்கம் முதல் ஈரோட்டில் தொடர்ச்சியாக 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு 103 டிகிரியைத் தொட்ட வெப்பம் நேற்று முன் தினம் 104 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவானது. இந்நிலையில், நேற்று அதிகபட்சமாக 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE