சென்னை: எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணையில் தவறு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றுசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஆவடி காவலர் குடியிருப்பைச் சேர்ந்த கோதண்டராமன், சென்னை, ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். இவரது மகள் பிரதிஷா (10). மகளுக்கு 3 வயது இருக்கும்போது சிறுநீரகப் பாதிப்புஏற்பட்டதால், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
மகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைசெய்த மாத்திரைகளை 5 ஆண்டுகளாக பெற்றோர் கொடுத்து வந்துள்ளனர். ஆனால், 2021-ம் ஆண்டு சிறுமிக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டு, வலது காலும், இடது கையும் செயலிழந்துள்ளன. இதற்குமருத்துவமனை நிர்வாகம் சரியானவிளக்கம் அளிக்கவில்லை. காவல்துறை, சுகாதாரத் துறையில் பெற்றோர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், வேதனை அடைந்த கோதண்டராமன் நேற்று முன்தினம் தலைமைச் செயலகம் அருகே மகள் பிரதிஷாவுடன் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையின் தவறான சிகிச்சையால்தான், என் மகள் வாழ்க்கை இப்படியாகிவிட்டது எனக் குற்றஞ்சாட்டிய அவர், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ``அரசு மருத்துவமனைகளில் சில தவறுகள் நடக்கும். அந்த தவறுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. காவலர் கோதண்டராமனிடம் செல்போனில் பேசினேன். அவர் குழந்தைக்கு 3 வயதிலிருந்தே சிகிச்சைபெற்று வருகிறார்.
அவர் ஒரு மருத்துவரைக் குற்றம் சாட்டினார். விசாரணைநடத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவினர் விசாரணை நடத்தித் தவறு நடந்திருப்பதாக உறுதிப்படுத்தினால் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
14 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago