விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரில் ‘கள ஆய்வில் முதல்வர்' திட்டம் - ஏப்.25, 26-ல் ஸ்டாலின் ஆய்வு

By செய்திப்பிரிவு

விழுப்புரம்: ‘கள ஆய்வில் முதல்வர்' திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

‘கள ஆய்வில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகின்ற 25 மற்றும் 26-ம் தேதியில் ஆய்வு செய்யவுள்ளார்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பிற மாவட்ட அலுவலர்களுடன் இரண்டு நாள் மண்டல ஆய்வுக் கூட்டம் 25-ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

26-ம் தேதி காலை 9.30 மணிக்கு வேளாண்மை, அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகள், கிராமப்புறங்களின் வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, வாழ்வாதார மேம்பாடு, ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து, சமூக நலன், இளை ஞர்கள் மற்றும் மாணவர்களின் திறன் உள்ளிட்டவைகள் குறித்து ஒரே நேரத்தில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெறும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என தலைமை செயலாளர் இறையன்பு விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடந்த 10-ம் தேதி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE