வேலூர்: திமுகவினரின் சொத்துப் பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியலுக்காக வெளியிட்டுள்ளார் என்றும், இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கரின் 133வது பிறந்த நாளையொட்டி வேலூர் மக்கான் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், "காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை கடந்த ஆட்சியாளர்கள் முறையாக செயல்படுத்தவில்லை. தற்போதைய திமுக தலைமையிலான தமிழக அரசுதான் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வெளிநாட்டில் இருந்து நிதி பெற்று இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இந்த திட்டத்தின் கீழ் காவிரி தெற்கு வெள்ளாறு வழியாக குண்டாற்றை இணைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன் அடிப்படையில் காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக பெருந்தலைவர்களின் சொத்துப்பட்டியலை வெளியிட்டுள்ளார் என்பது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி எழுப்பியபோது, "அதெல்லாம் எனக்குத் தெரியாது. அரசியல் காரணத்துக்காக அவர் இதையெல்லாம் செய்கிறார்" என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago