மறந்து வரும் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் மீட்டுப் பாதுகாக்கும் வகையில் வீடு முழுவதும் 1 லட்சம் பொம்மைகளுடன் 27 ஆண்டுகளாக பிரம்மாண்டமான கொலு அமைத்து வருகின்றனர் கும்பகோணத்தைச் சேர்ந்த தம்பதியினர்.
உலகில் 3 அசுரர்கள் மக்களைக் கொன்று குவித்து நாட்டை துவம்சம் செய்து வந்தனர். இந்த அசுரர்களை பார்வதிதேவி காளியாகவும், மகாலட்சுமி விஷ்ணுதுர்க்கையாகவும், மகாசரஸ்வதி நிதம்பசூதனியாகவும் உருவெடுத்து 9 நாட்கள் வதம் செய்து உலகைக் காப்பாற்றினர்.
இந்த 9 நாட்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. மகாளய அமாவாசைக்கு மறுநாள் தொடங்கும் இந்த நவராத்திரி விழா சரஸ்வதி பூஜை அன்று நிறைவு பெறும்.
இந்த நவராத்திரி விழாவில், ஒவ்வொரு இல்லத்துக்கும் தேவதைகளான அம்மன் தெய்வங்கள் அந்தந்த இல்லத்துக்கே வந்து அருள்பாலிப்பதாக ஐதீகம். உலகில் உள்ள எந்த ஒரு பொருளிலும் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் நவராத்திரி கொலு நடத்தப் படுகிறது.
இவ்வாறு வீடுகள், கோயில்களில் அமைக்கப்படும் நவராத்திரி கொலுவுக்கு ஒவ்வொருவரும் அழகிய பொம்மைகளை தேடிப்பிடித்து வாங்கி வந்து கொலுவை சிறப்பு செய்வது வழக்கம்.
700 சதுர அடியில்...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அய்யங்கார் தெருவில் மோகன்- மீனாட்சி தம்பதியினர் கடந்த 27 ஆண்டுகளாக தங்களது வீட்டில் கொலு அமைத்து வருகின்றனர். இந்த ஆண்டு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பொம்மைகளைக் கொண்டு வீட்டின் வரவேற்பறை, கூடம், பூஜையறை, மாடி ஆகிய இடங்களில் 700 சதுர அடி பரப்பளவில் கொலு அமைத்துள்ளனர்.
இதுகுறித்து மோகன் - மீனாட்சி தம்பதியினர் கூறியது: நாங்கள் 27 ஆண்டுகளாக கொலு அமைத்து வருகிறோம். இதற்காக நாங்கள் கும்பகோணம் கருப்பூரில் பொம்மைகளை ஆண்டுதோறும் வாங்கி விடுவோம். மேலும், வெளியூர் சென்றால் அங்கும் பொம்மைகளை வாங்கி வருவது வழக்கம்.
இந்த ஆண்டு கொலுவில் 151 வகையான விநாயகர், 108 சிவலிங்கம், திருப்பதி மலை, கஜேந்திரமோட்சம், மகாமகக் குளம், மீனாட்சி கல்யாணம், அஷ்டலட்சுமி, ஆழ்வார்கள், அறுபடை வீடு, 63 நாயன்மார்கள், சங்கீத மும்மூர்த்திகள், ராமாயண காட்சிகள், மாப்பிள்ளை அழைப்பு, கிராமம், பூங்கா, காய்கறிகள், பழங்கள், காட்டு விலங்குகள், வளர்ப்பு பிராணிகள், சந்தை என 2 இஞ்ச் முதல் 4 அடி வரையிலான பொம்மைகள் மூலம் கொலு அமைத்துள்ளோம்.
இந்த கொலு காட்சியை முறைப்படுத்த 4 நாட்களானது. 1,250 சதுர அடி கொண்ட எங்கள் வீட்டில் 700 சதுர அடி பரப்பளவில் இந்த கொலுவை அமைத்துள்ளோம்.
மறந்து போகும் கலாச்சாரமும், பாரம்பரியமும் மீட்கப்பட வேண்டும் என்பதை கொலு மூலம் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். தினமும் பலரும் எங்கள் வீட்டுக்கு வந்து கொலுவைப் பார்த்து பரவசமடைவதுடன், பாராட்டிவிட்டுச் செல்கின்றனர் என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago