மதுரையில் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை: கிராம வார்டு கவுன்சிலர், துணைத் தலைவர் மீது வழக்கு

By என். சன்னாசி

மதுரை: மதுரையில் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட பெண் விவகாரத்தில் கிராம வார்டு கவுன்சிலர், ஊராட்சி துணைத் தலைவரை போலீஸ் தேடுகிறது. மேலும், வழக்கில் சிக்கிய ஊராட்சி எழுத்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையில், நிவாரணம் கேட்டு உடலை வாங்க மறுத்து நாகலட்சுமியின் உறவினர்கள் போராட்டம் செய்கின்றனர்.

மதுரை திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான் பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் என்பவருக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி நாகலட்சுமி (32). போதிய வருமானமின்றி, மதுரை ஆட்சியர் மூலம் மையிட்டான்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் பணியை பெற்றார். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக அப்பணியை செய்து வந்த அவரை, பணி செய்ய விடாமலும், சம்பள தராமலும் மையிட்டான்பட்டி கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களான வீரக்குமார், பாலமுருகன் மற்றும் ஊராட்சி எழுத்தர் முத்து ஆகியோர் மிரட்டியுள்ளனர்.

மனமுடைந்த அவர், ஆட்சியரிடம் மனுகொடுக்க திட்டமிட்டு, நேற்று மையிட்டான்பட்டி - திருமங்கலத்திற்கு நகர் பேருந்தில் சென்றபோது, விரக்தியில் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். மேலும், தனது தற்கொலைக்கு காரணமான மையிட்டான்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் வீரக்குமார், பாலமுருகன் (ஊராட்சி துணைத்தலைவர்), ஊராட்சி எழுத்தர் முத்து ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், ஏற்கெனவே இவர்கள் மீது கள்ளிக்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை முறையாக போலீஸார் விசாரிக்கவில்லை எனவும் அவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றும் சிக்கியது. இக்கடிதத்தை கள்ளிக்குடி போலீஸார் கைப்பற்றினர்.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து நாகலட்சுமியின் கணவர் கணேசன் தனது 5 குழந்தைகளுடன் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். மனைவியின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது 5 குழந்தைகளின் வாழ்வாதாரத் திற்கும், அவர்களின் கல்விக்கும் அரசு உதவவேண்டும். இல்லையெனில், மனைவியின் உடலை வாங்க மாட்டேன் என வலியுறுத்தினார். ஆட்சியர் அனீஷ்சேகர் உத்தரவின்பேரில் , கூடுதல் ஆட்சியர் சரவணன் தலைமையில் அதிகாரிகள், மையிட்டான் பட்டி ஊராட்சி தலைவர் அடங்கிய குழுவினர் சம்பவம் குறித்து விசாரித்தனர்.

நாகலட்சுமி (அடுத்த படம்) நாகலட்சுமியுடன் பேருந்தில் பயணித்த அவரது இரு பெண் குழந்தைகள்.

நாகலட்சுமி தற்கொலைக்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர்கள் உறுதியளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து நாகலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியதாக ஊரா ட்சி வார்டு கவுன்சிலர் வீரக்குமார், துணைத் தலைவர் பாலமுருகன், ஊராட்சி எழுத்தர் முத்து ஆகியோர் மீது கள்ளிக்குடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் வீரக்குமார் உட்பட 3 பேரையும் திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் தலைமையிலான தனிப்படையினர் தேடுகின்றனர்.

இருப்பினும், மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த நாகலட்சுமியின் உடலை அவரது குடும்பத்தினர், உறவினர்கள் வாங்க மறுத்துள்ளனர். தற்கொலைக்கு துண்டிய நபர்களை உடனே கைது செய்யவேண்டும், அரசு நிவாரணம் வழங்கவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், நாகலட்சுமியை தற்கொலைக்கு தூண்டியவர்களை உடனே கைது செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட நாகலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் வழங்கவேண்டும், அவரது குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் புறநகர் மாவட்டக் குழுகள் சார்பில், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல் ராஜ் தலைமையில் பனகல் சாலையில் மறியல் போராட்டம் நடந்தது. மாநில குழு உறுப்பினர்கள் பொன்னுத்தாயி, விஜயராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் போக்குவரத்து சிறிது நேரம் பாதித்தது.

இதனிடையே நாகலட்சுமியின் தற்கொலை வழக்கில் சிக்கிய மையிட்டான்பட்டி ஊராட்சி எழுத்தர் முத்து பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாலை 5.30 மணிவரை நாகலட்சுமியின் உடலை குடும்பத்தினர் வாங்க வில்லை. அதிகாரிகள், போலீஸார் தொடர்ந்து பேச்சு நடத்துகின்றனர்.

நடந்தது என்ன? - விரிவாக வாசிக்க > 5 குழந்தைகளின் தாய் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை - புகார் கொடுத்தும் வேடிக்கை பார்த்த கள்ளிக்குடி போலீஸார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்